(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. 

தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும்  தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.