வடமாகாண வேலையற்றபட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. 

மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் “நல்லாட்சி அரசே நாடகமாடாதே” , “ கொடு கொடு வேலையைக்கொடு ” ,  “தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ” ,  “இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டதுபோதும் இனியும் ஏமாறத் தயாரில்லை ” , “ வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படவில்லை” என்று கோசமிட்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டதுடன் வியாபார நிலையங்களுக்குச் சென்று எமது போராட்டம் தொடர்ந்து இவ்வாறாக செல்வதை நாம் விரும்பவில்லை எமது போராட்டத்தை வடமாகாண மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக விரைவில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். 

எனவே எமது போராட்டத்தில் தாங்களும் பங்குபற்றி எமது தொழில் உரிமைக்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்து ஆதரவு வழங்குமாறு  துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.‌