ஆஷஸ் டெஸ்ட் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்

Published By: Priyatharshan

02 Dec, 2017 | 10:42 AM
image

ஆஷஸ் தொடரில் அவுஸ்­தி­ரே­லிய – -இங்­கி­லாந்து அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு போட்­டி­யாக அடி­லெய்டில் இன்று தொடங்­கு­கி­றது.

அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் ஜோ ரூட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி 5 போட்­டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்­கேற்­றுள்­ளது. 

பிரிஸ்­பேனில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ் டில் அவுஸ்­தி­ரே­லியா 10 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–-0 என்ற கணக்கில் முன்­னிலை வகிக்­கி­றது.

இந்த நிலையில் இவ்­விரு அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி அடி­லெய் டில் இன்று தொடங்­கு­கி­றது. 

இந்த டெஸ்டில் இன்­னொரு சிறப்பு அம்சம் என்­ன­வென்றால் இது பக­லி­ரவு மோத­லாகும். இதற்­காக பிரத்தி­யே­க­மான இளஞ்­சி­வப்பு நிற பந்து (பிங்க்) பயன்­ப­டுத்­தப்­படும். ஆஷஸ் வர­லாற்றில் மின்­னொ­ளியின் கீழ் நடத்­தப்­படும் முதல் டெஸ்ட் இது தான்.

தொடக்க டெஸ்டில் இங்­கி­லாந்து நிர்­ண­யித்த 171 ஓட்­டங்கள் இலக்கை அவுஸ்­தி­ரே­லி­ய அணி டேவிட் வோர்னர், பான்­கிராப்ட் ஆகி­யோரின் அரை­ச்ச­தங்­களின் உத­வி­யுடன் விக்கெட் இழப்­பின்றி எட்­டிப்­பி­டித்­தது. 

அடி­லெய்ட் ஆடு­களம் வேகப்­பந்து வீச்­சுக்கு ஒத்­து­ழைக்கும். நன்கு ஸ்விங் ஆகும் என்று அவுஸ்­தி­ரே­லிய பயிற்­சி­யாளர் டேரன் லீமான் கூறி­யுள்ளார். அதனால் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகி­யோரின் தாக்­குதல் இன்னும் தீவி­ர­மாக இருக்கும்.

முத­லா­வது டெஸ்டில் மோச­மாக தோற்­றதால் விமர்­ச­னத்­திற்­குள்­ளான இங்­கி­லாந்து அணி­யினர் சரி­வி­லி­ருந்து எழுச்சி பெறும் முனைப்­புடன் இருக்­கி­றார்கள். வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் ஜேம்ஸ் அண்­டர்சன், ஜாக் பால், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கி­றார்கள் என்பதை பொறுத்தே இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு அமையும். பதிலடி கொடுப்பார்களா அல்லது பணிந்து போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07