சமுத்­தி­ரங்­களிலான  பிளாஸ்டிக் மாசாக்கம் தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்­மையை கடை­ப்பி­டிப்­பது குறித்து கென்ய நைரோபி நகரில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் சுற்­றுச்­சூழல் தொடர்­பான உச்­சி­மா­நாட்டில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

 இந்­நி­லையில் கடலில் பிளாஸ்டிக் கழி­வுகள் சேர்­வதை தடுப்­ப­தற்கு சட்­ட­பூர்­வ­மான உடன்­ப­டிக்­கையை எட்­டு­வ­தற்கு  உல­க­ளா­விய அர­சாங்­கங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 தற்­போது கடலில் பெரு­ம­ள­வான பிளாஸ்டிக் கழி­வுகள் சேர்­கின்ற நிலையில் அவற்றைத் தடுக்க சர்­வ­தேச ரீதி­யான சட்டம் எதுவும் நடை­மு­றையில் இல்­லாது உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 இந்­நி­லையில் கடலில் சேரும் பிளாஸ்­டிக்கால் சுற்றுச்சூழ­லுக்கும் கடல்வாழ் உயி­ரி­னங்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தலைத் தடுக்க உல­க­ளா­விய உடன்படிக்கையொன்று எட்டப்படுவது அவசியம் என சர்வதேச நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.