பாகிஸ்­தானின் பெஷாவர் நக­ரி­லுள்ள விவ­சாய பல்­க­லைக்­க­ழக விடு­தியை இலக்­கு­வைத்து 4 தீவி­ர­வா­திகள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 9  பேர் பலி­யா­ன­துடன் 36 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னி­லுள்ள தெஹ்ரீக் தலிபான் தீவி­ர­வாத குழு உரி­மை­கோ­ரி­யுள்­ளது.

 குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து காய­ம­டைந்­த­வர்கள் கைபர் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு  கொண்டு செல்­லப்­பட்டு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

 காய­ம­டைந்­த­வர்­களில் 8 மாண­வர்­களும் ஒரு படை­வீ­ரரும் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரும் ஒரு காவ­லரும் ஒரு ஊட­க­வி­ய­லா­ளரும் உள்­ள­டங்­கு­வ­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்கள்  தெரி­விக்­கின்­றன.

 இந்தத் தாக்­கு­த­லை­ய­டுத்து மருத்­து­வ­ம­னையில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  அவர்கள் கூறு­கின்­றனர்.

அதே­ச­மயம் இந்தத் தாக்­கு­தலில் காய­ம­டைந்த இரு படை­வீ­ரர்கள் சிகிச்­சைக்­காக இரா­ணுவ மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ள­தாக  அந்­நாட்டு அதி­கா­ரிகள்  தெரி­விக்­கின்­றனர்.

சம்­பவ இடத்­திற்கு வந்த படை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் தீவி­ர­வா­திகள் தரப்பில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சில செய்­தி­களும் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வேறு சில செய்­தி­களும் தெரி­விக்­கின்­றன.

 நபிகள் நாய­கத்தின் பிறந்­த­தின விடு­மு­றை­யை­யொட்டி அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் விடுதி நேற்று வெள்­ளிக்­கி­ழமை  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மூடப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் தாக்­கு­தல்­தா­ரிகள் அலங்­கார முச்­சக்­கர வண்­டி­யொன்றில் வந்து துப்­பாக்கிச்சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.