தாம­தித்­தா­வது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்கும் ; ஜெஹான் பெரேரா

Published By: Priyatharshan

02 Dec, 2017 | 10:19 AM
image

நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல்  செயற்­பாட்டை  அர­சாங்கம்  தாம­தித்­தாலும்   அதனை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை எனக்கு இன்னும் இருக்­கின்­றது. கூட்டு எதி­ரணி  மிகவும்  பல­மாக செயற்­ப­டு­கின்­ற­மையின் கார­ண­மாக அர­சாங்கம்  இந்த விட­யத்தில் தயக்­கத்தை  காட்­டு­கின்­றது என்று தேசிய சமா­தான பேர­வையின்  நிறை­வேற்று பணிப்­பாளர்  கலா­நிதி  ஜெஹான் பெரேரா  தெரி­வித்தார். 

காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை  நிய­மிக்கும்  சாத்­தியம் இருந்தும் அதனை  அர­சாங்கம்  தாம­திக்­கின்­றது.     பெரும்­பாலும்  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்தல் முடி­வ­டைந்­ததும்   இதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று நான் நம்­பு­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

அர­சாங்கம் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை   தாம­திக்­காமல் விரைந்து முன்­னெ­டுக்­க­வேண்டும் என்று  சர்­வ­தேசம்  தெரி­வித்து வரு­கின்­றமை  தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில், 

நல்­லாட்சி  அர­சாங்கம்  நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி முன்­னெ­டுக்கும் என்று  எனக்கு நம்­பிக்கை உள்­ளது. அதா­வது இந்த செயற்­பா­டுகள்  தாமதம் அடைந்­தாலும் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற நம்­பிக்கை   வலு­வா­கவே உள்­ளது. 

அதா­வது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு  தொடர்பில் புரிந்­து­கொண்­டுள்ள அர­சாங்­கத்தின் தலை­மையே தற்­போது பத­வியில் உள்­ளது.  நல்­லி­ணக்கம் எந்­த­ளவு தூரம்  முக்­கி­யத்­துவம்  மிக்­கது என்­ப­தனை இந்த அர­சாங்கம் புரிந்­து­கொண்­டுள்­ளது. 

ஆனால் கூட்டு எதி­ரணி  மிகவும் பல­மான முறையில் செயற்­ப­டு­வதன் கார­ண­மாக  அர­சாங்­கத்­தினால் இந்த செயற்­பா­டு­களை  சரி­யான முறையில் முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.  காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை  நிய­மிக்கும்  சாத்­தியம் இருந்தும் அதனை  அர­சாங்கம்  தாம­திக்­கின்­றது. 

அத்­துடன் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு மற்றும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் என்­ப­ன­வற்றை    அமைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அவற்றை     சட்­ட­மாக்­கு­வ­தற்கு அர­சாங்கம்  தயங்­கு­கின்­றது.  

காரணம் தற்­போது உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலும்  நடை­பெ­ற­வி­ருப்­பதால் நல்­லி­ணக்க மற்றும்  பொறுப்­புக்­கூறல் விட­யங்­களை அர­சாங்கம்   மேலும் தாம­திக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. காரணம்  தற்­போ­தைய சூழலில்   காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­துக்கு  ஆணை­யா­ளர்­களை நிய­மித்தால்     எதிர்க்­கட்­சிகள்  அதனை    வேறு­வி­த­மாக   தேர்தல் காலத்தில் பிர­சாரம் செய்ய ஆரம்­பித்­து­விடும். 

எனவே அர­சாங்­கத்­துக்கு இந்த  சூழலில் காணப்­ப­டு­கின்ற சவால்­க­ளையும்  நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்­க­வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு காணப்­பட்­டாலும் எதிர்க்­கட்­சிகள் அதனை  மக்கள் மத்­தியில் வேறு­வி­த­மாக பிர­சாரம் செய்­து­விடும் என்ற அச்சமும் உள்ளது. குறிப்பாக தேர்தல் காலத் தில்  குழப்பம் ஏற்பட்டுவிடும் என்று  அரசாங்கம் கருதலாம்.  

ஆனால் நல்லிணக்கம் மற்றும் பொறுப் புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது. எனவே   தாமதித்தாவது  இந்த செயற் பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று  நம்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10