உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் இடம்­பெ­று­வது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் புதிய முறையில் தேர்தல் நடத்­தப்­படும் என பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்­தி ­அ­மைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கடந்­த­கால ஊழல் குற்­றங்­களை கண்­ட­றி­வதில் இந்த அர­சாங்கம் பின்­வாங்­கு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். 

பாரிய நகர மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் அனைத்தும் ஒரே தினத்தில் நடத்­தப்­பட வேண்டும் என்­பதே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் நிலைப்­பா­டாகும். எனினும் கடந்த காலங்­களில் தேர்­தலை நடத்­து­வதில் சில குழப்­பங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் தற்­போது ஒரே தினத்தில் சகல தேர்­தல்­க­ளையும் நடத்­தவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது வர­வேற்­கத்­தக்க ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். புதிய தேர்தல் முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் புதிய முறை­மையில் தேர்தல் நடத்­தப்­படும். எனினும் புதுக்­கு­டி­யி­ருப்பு மற்றும் முல்­லைத்­தீவு ஆகிய பிரி­வு­களில் யுத்­தத்தின்  பின்னர் மக்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டதில் ஏற்­பட்ட தாம­தங்கள் கார­ண­மாக எல்லை நிர்­ணயம் செய்­யப்­ப­ட­வில்லை. எனவே இந்த இரண்டு பகு­திக்கும் பழைய முறை­மையில் தேர்தல் நடத்­தப்­படும். ஏனைய சகல பகு­திகளுக்கும் புதிய முறை­மையில் தேர்தல் நடத்­தப்­படும். 

மேலும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷவை கைது செய்­வது குறித்தும் நாம் பழி­வாங்க முயற்­சிப்­ப­தா­கவும் சிலர் தெரி­விக்கும் கருத்­துக்கள் அடிப்­படை உண்மை அற்­ற­தாகும். எமக்கு யாரையும் பழி­வாங்க வேண்­டிய அவ­சியம் இல்லை. எனினும் ஊழல், குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­காது இருக்­கவும் முடி­யாது. ராஜபக் ஷ அமைப்­பினால் எமது அமைச்­சுக்கு 560 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இவற்றை சட்ட ரீதியில் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதேபோல் கடந்த கால ஊழல்கள் குற்­றங்கள் குறித்து அர­சாங்கம் விசா­ர­ணை­களை முன்னெடுக்­க­வில்லை அல்­லது விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் பின்­வாங்­கு­வ­தாக மக்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். அதை மறுக்­கவும் முடி­யாது. ஆகவே முன்­னைய ஆட்­சி­யாளர் குடும்ப ஆட்­சி­யா­ளர்கள் செய்த தவ­றுகள் குறித்து சட்­ட­மு­றைப்­படி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதில் நாமும் உறு­தி­யாக உள்ளோம். 

எமது ஆட்­சியில் ஊழல்கள் இடம்­பெ­ற­வில்லை என கூற­வில்லை, எனினும் எமது ஆட்­சியில் செய்­துள்ள ஊழல் குற்­றங்கள் குறித்தும் சட்ட முறைப்­படி நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டுள்ளது. விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருகின்­றது. ஊழல்­களை ஒரே நேரத்தில் தடுத்துவிட முடியாது. எனினும் நாம் ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்கும் வகையில் சகல தரப்பினருக்கும் அதி காரங்க ளை கொடுத்து ஊடக சுதந்திரத்தை வழங்கிசுயாதீனத்தை ஏற்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக் கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.