மேல் மாகா­ணத்தில் வீதி­களில் திரியும் கட்­டாக்­காலி மாடு­களை அப்­பு­றப்­ப­டுத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவை கால்­நடை காப்­ப­கங்­களில் விடப்­படும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். பரா­ம­ரிப்­பாளர் இல்­லாத 689 மாடுகள் அடை­யா­ளம் ­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

வீதி­களில் திரியும் கட்­டாக்­காலி மாடு­க­ளினால் குறிப்­பாக நகர் புறங்­களில் பாரிய நெருக்­க­டி நிலை ஏற்­ப­ட்டுள்ளது. பிர­தான வீதி­களில் அதி­கா­லையில் இவ்­வாறு நட­மாடும் மாடு­க­ளினால் வாகன விபத்­துக்கள் பலவும் பதி­வா­கி­யுள்­ளன. அதேபோல் மாடு­க­ளுக்­கான சரி­யான உண­வுகள் கிடைக்­காத நிலையில் பொலித்தீன் பைகளை உண்­ப­தனால் இறக்கும் நிலை­மையும் ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த செயற்­பா­டு­க­ளுக்கு தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொள்ள வேண்டும். நகர்ப்புறங்­களில் கட்­டாக்­கா­லி­யாக திரியும் மாடுகள் மற்றும் உரி­மை­யா­ளர்கள் இருந்தும் பரா­ம­ரிக்­கப்­ப­டாத மாடு­களை உட­ன­டி­யாக நகர்ப்புறங்­களில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

எம்­பி­லி­ப்பிட்­டிய பகு­தியில் உள்ள கால்­நடை காப்­ப­கங்­களில் இவை விடப்­படும். அங்கு மாடு­க­ளுக்­கான உண­வுகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் முறை­யான பரா­ம­ரிப்பும் இடம்­பெறும். அத்­துடன் இந்த மாடு­களை கிரா­மப்­பு­றங்­களில் உள்ள விவ­சா­யி­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. முறை­யாக பரா­ம­ரிப்பை கையாளும் விவா­யிகள் தாம் இந்த மாடு­களை பெற்­றுக்­கொள்ள முடியும். 

அதேபோல் கொழும்பில் மாடு­களை வளர்க்க சிரமப்படும் நபர்கள் எமது அமைச்சில் மாடுகளை கையளிக்க முடியும். எவ்வாறு இருப்பினும் இம்மாதம் 15 ஆம் திகதியில் இருந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.