நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து பிரதேசங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தம் மற்றும் மின்தடை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரதேசத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தம் குறித்து தகவல்களை அனர்த்த விசேட நடவடிக்கைப் பிரிவுக்கு அறிவிக்க முடியும். இதற்கான தொலைபேசி இலக்கம் 011 2507080 .

இதேவேளை, சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பிரதேசங்களில் சீரான மின் விநியோகத்தை வழங்குவதில் பெரும் சிக்கல்நிலை தோன்றியுள்ள நிலையில், மின் விநியோகத்தை சீராக வழங்கும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பல பிரதேசங்களில் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது. 

இந்நிலையில், மின் விநியோகத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொண்டு அறிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அவசர தொலைபேசி இலக்கங்கள் வருமாறு,

மின்வலு அமைச்சு 1901

இலங்கை தனியார் மின்சார நிறுவனம் 1910

இலங்கை மின்சார சபை 1987

 களுத்துறை, இரத்மலானை  011 44 18 418 

தென் மாகாணம்  071 4 238 623