ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்­டியில் ஆடு­க­ளத்தின் போக்­குக்கு எதி­ராக அரு­மை­யாக வீசிய நதன் லயன் அடிலெய்ட் டெஸ்ட் போட்­டியில் தன் பந்து வீச்சை முடிந்தால் இங்­கி­லாந்து வீரர்கள் அடித்து ஆடிப்­பார்க்­கட்டும் என்று சவால் விடுத்­துள்ளார்.

இங்­கி­லாந்து அணியின் சில வீரர்­களின் கிரிக்கெட் வாழ்க்கை இந்தத் தொட­ருடன் முடிந்து விடும் என்று ஆஷஸ் தொட­ருக்கு முன்பு கூறி வெறுப்­பேற்­றிய நதன் லயன் தற்­போது, ‘முடிந்தால் அடி­யுங்கள்’ என்று சவால் விடுத்­துள்ளார்.

“இங்­கி­லாந்து அணி­யினர் என்னை அடித்து ஆடினால் நிச்­சயம் என் வலையில் விழுவர்.  நிச்­சயம் கடந்த டெஸ்ட் போட்­டியை விட இரண்­டா­வது போட்­டியில் இங்­கி­லாந்து அணி­யினர் எனக்கு எதி­ராக சிறந்த உத்­தி­யுடன் இறங்­கு­வார்கள் என்று எதிர்­பார்க்­கிறேன். 

ஆனால் இப்­ப­டிப்­பட்ட சவால்­கள்தான் கிரிக்கெட் ஆட்­டத்தின் வேடிக்­கையே. வலது கை, இடது கை வீரர்­க­ளுக்கும் உலகின் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கும் வீசும் சவால்­களை நான் எப்­போதும் விரும்­பியே இருக்­கிறேன். 

வீரர்கள் அடித்து ஆடும்­போ­துதான் எனக்கும் விக்­கெட்­டுக்­களை வீழ்த்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­ரிக்கும். எனவே இது எதிர்­பார்ப்­பு­களை அதி­க­ரிக்­கி­றது, சவாலை எதிர்­நோக்­கு­கிறேன் என்றார் நதன் லயன்.