பாகிஸ் தான் அணி­யி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­பட்­டுள்ள துடுப்­பாட்ட வீரர் உமர் அக்மல் குறித்து சமூக வலை­த்த­ளத்தில் திடீ­ரென பர­ப­ரப்­பான தக­வல்கள் பர­வி­யுள்­ளன.

பயிற்­சி­யா­ள­ருடனான மோதலால் பாகிஸ்தான் அணி­யி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­பட்­டுள்ள துடுப்­பாட்ட வீரர் உமர் அக்மல் இறந்­து­விட்­ட­தாக சமூக வலை­த்த­ளத்தில் திடீ­ரென பர­ப­ரப்­பான தக­வல்கள் பர­வின. 

இதை­ய­டுத்து அவர் டுவிட்­டரில் காணொளி  ஒன்றை பதி­விட்­டி­ருக்­கிறார். 

அதில் அவர் ‘கட­வுளின் அருளால் நான் நல­முடன் நன்­றாக இருக்­கிறேன். சமூக வலை­த்த­ளத்தில் என்னை பற்றி வந்த தக­வல்கள் எல்­லாமே தவ­றா­னவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்­தி­களை தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.