யாழ்ப்­பாணம் மணி­யந்­தோட்டம் பகு­தியில் இளைஞர் ஒருவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்டு கொலை செய்த சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட இரு பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை சேர்ந்­த­வர்­களின் விளக்­க­ம­றி­யலை நீடித்து யாழ்.நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எஸ்.சதீஸ்­கரன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி அரி­யாலை கிழக்கு மணி­யம்­தோட்டம் வசந்­த­புரம் முதலாம் குறுக்கு வீதிப் பகு­தியில் 24 வய­து­டைய டொன்­பொஸ்கோ டிஸ்மன் என்­பவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். 

இக் கொலைச் சம்­பவம் தொடர்­பாக குற்றப் புல­னாய்வு பிரி­வினர் யாழ்ப்­பாணம் பண்ணை விஷேட அதி­ர­டிப்­படை முகா­மினை சேர்ந்த இரு­வரை கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வரும் யாழ்.நீதிவான் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். 

இந்­நி­லையில் நேற்­றைய தினமும் குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது சந்­தே­க ­ந­பர்கள் சார்­பாக சட்­டத்­த­ரணி பி.மோக­னதாஸ் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

இதன்­போது குற்றப் புல­னாய்வு பிரி­வினர் மேல­திக அறிக்­கை­யொன்றை தாக்கல் செய்து குறித்த சம்­பவம் தொடர்­பாக தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக மன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்­தனர். 

இதனை தொடர்ந்து குறித்த இரு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரதும் விளக்கமறியலை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.