19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின.
இந்த போட்டியின்போது ஒரு வேடிக்கை நடந்தது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான கமிந்து மெண்டிஸ் இரண்டு,கைகளாலும் பந்து வீசும் திறமை படைத்தவர். இந்த போட்டியின்போது வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு இடது கை மூலமாகவும், இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வலது கையாலும் பந்து வீசி அசத்தினார்.
இவரது பந்து வீச்சை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
கமிந்துவுக்கு 17 வயதாகிறது. வலது கை பந்துவீச்சு மற்றும் இடது கை ஆர்த்தோடாக்ஸ் பந்து வீச்சு மூலம் அனைவரையும் அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த இரு வகை பந்து வீச்சையும் அவர் மாறி மாறி நிகழ்த்தியதால் பாகிஸ்தான் வீரர்களே குழம்பிப் போய் விட்டனர்.
இப்படி பந்து வீசுவது, அதுவும் இவ்வளவு இளம் வயதில் வீசுவது அரிதிலும் அரிது. இது வரை சர்வதேச போட்டிகளில் இப்படிப்பட்ட பந்து வீச்சை யாரும் கொடுத்ததில்லை என்பதால் கமிந்து வரலாற்றில் இடம் பெற்று விட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM