கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் சூழ்ச்சி செய்து வரு­கி­றது. எனினும் அவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அதனை அர­சியல் ரீதி­யா­கவும் சட்ட ரீதி­யா­கவும் எதிர்­கொள்­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தயா­ராக உள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் கூட்டு எதிர்க்­கட்சி மீது அச்சம் கொண்­டுள்­ளது. அத­னால்தான் கூட்டு எதிர்க்­கட்­சியை அடக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. எனவே கூட்டு எதிர்க்­கட்­சியில் இணைந்­தி­ருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் உடன்­ப­டிக்கை ஒன்­றுக்கு வராத­வி­டத்து அவர்­களை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அச்­சு­றுத்தல் விடுக்­கின்­றனர்.

குறித்த உறுப்­பி­னர்கள் உடன்­ப­டிக்­கைக்கு வரா­த­வி­டத்து அவர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்றி, அதன் பின்னர் அவர்­களின் தொகு­தி­களில் சிக்கல் நிலையை கொண்­டு­வந்து பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர். 

மக்­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாற்­பத்­தைந்து பேரை பாரா­ளு­மன்­றி­லி­ருந்து வெளி­யேற்­று­வது இல­கு­வான விட­ய­மல்ல. மேலும் அர­சாங்கம் மக்­களின் அபிப்­பி­ர­ாயங்­க­ளுக்கு ஒரு­போதும் செவி­சாய்ப்­ப­தாக இல்லை. மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட 10 இற்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்றில் தற்­போதும் அங்கம் வகிக்­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் மேலும் மக்­க­ளினால் தெரி­வு­செய்­யப்­பட்ட 45 உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்­றி­லி­ருந்து விலக்­கி­விட்டு அதற்குப் பதி­லாக மக்கள் நிரா­க­ரித்த உறுப்­பி­னர்­களை உள்­வாங்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ளனர். 

ஆகவே மக்கள் தொடர்பில் கரி­சனை காட்டும் உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்றில் வைத்­தி­ருப்­ப­தற்குப் பதி­லாக அர­சாங்­கத்­திற்கு முட்­டுக்­கொ­டுக்கும் உறுப்­பி­னர்­களை பாராளுமன்றில் வைத்திருப்பதற்கே அரசாங்கம் முனைகிறது. 

கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அச்சமூட்டி அவர்களை உடன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது என்பதை அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும் அவர்  தெரிவித்தார்.