நபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமையும்  என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  விடுத்­துள்ள  மீலாதுன் நபி வாழ்த்து செய்­தியில்   தெரி­வித்­துள்ளார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா ­வது;

இஸ்­லா­மிய சமய நம்­பிக்­கையின் படி இறை­வனால் முஹம்மத் நபி­ அ­வர்கள் இஸ்­லாத்தின் இறுதி நபி­யாகக் தெரி­வு­செய்­யப்­ப­ட்ட­துடன், அவர் சிறந்த சமூ­க­மொன்றை உரு­வாக்­கு­வதில் தனிச்­சி­றப் ­பான பணியை முன்­நின்று ஆற்­றிய தூது வர் ஆவார்.

மிகவும் எளி­மை­யான முறையில், சுக­போ­க­மற்ற, சிறப்­பான வாழ்­வினை வாழ்ந்து, சம­யத்தை நடை­முறை ரீதி­யாக உயிர்ப்­பித்த நபி அ­வர்கள், தியா­கத்­தன்மை, சமத்­துவம், சக­வாழ்வு, சகோ­த­ரத்­துவம், பொறுமை, நட்­பு­றவு மற்றும் நெகிழ்­வான கொள்­கைகள் ஊடாக சிறந்த சமூ­க­மொன்றை உரு­வாக்க முடியும் என்­ பதை உல­கிற்கு எடுத்­துக்­காட்­டினார்.

நபி­ அ­வர்கள் சவூதி அரே­பி­யாவின் மதீனா நகரில் சந்­ததி சந்­த­தி­யாக நிலவி வந்த கோத்­திரச் சண்­டை­களை சமா­தா­ன­மாகத் தீர்த்து வைத்து அமை­தி­யான சூழ­லொன்றை உரு­வாக்­கினார். அவ்­வாறு அகிம்­சை­யு­டனும், நன்­னெ­றி­யு­டனும் வெற்றி கொண்ட மதீனா நகரம் இன்று உலகம் முழு­வ­து­முள்ள முஸ்­லிம்­களின் புனி­தஸ்­த­ல­மாக மாறி­யுள்­ள­மை­யினை அவர்­க­ளது பிறந்த தினத்தில் விசே­ட­மாகக் குறிப்­பிட வேண்டும்.

நபி­ அ­வர்­களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலை­யான அமைதி, நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முஹம்மத் நபி அ­வர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழி­முறை எந்­த­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதைத் தெளி­வு­ப­டுத்த சிறந்த சந்தர்ப்ப மாகவும் அமையும்.

இலங்கை வாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ் முஸ்லிம் களுக்கும் சிறப்பான மீலாதுன் நபி தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.