டயகம பகுதியில் பெய்த அதிக மழையினால் நேற்றிரவு இரவு 7 மணியளவில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் டயகம வெஸ்ட் முதலாம் பிரிவில் மூன்று வீடுகளின் மீது பாரிய சைபிரஸ் மரம் ஒன்று விழுந்துள்ளதால், இவ்வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

அதேவேளை மின்சார இணைப்பு கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளதனால், இப்பிரதேசத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வீடுகளில் உள்ளவர்களை தற்காலிகமாக டயகம நகரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இப்பகுதியில் அபாயம் காரணமாக 12 குடும்பங்களைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு நலன் கருதி இதே ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச மக்கள் மற்றும் கிராம சேவகர் உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் வழங்கி வருகின்றனர்.