யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுத் தலைவர் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அறுவரும் பியகமவிலும் பரந்தனிலும் வைத்து தலா மும்மூன்று பேராகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரிகளே பியகமவில் வைத்து மூவரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.