நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.