உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ததன் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறித்த ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்திய ஆறு பேரும் தமது மனுவை மீளப் பெறச் சம்மதித்துள்ளனர்.

இதை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது பற்றி இன்று (30) பாராளுமன்றில் பேசிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் நிலையை உருவாக்கிய மனுதாரர்கள் ஆறு பேரும் தமது மனுக்களை மீளப் பெறச் சம்மதித்திருப்பதாகவும் இதனால், தேர்தல்களை உரிய திகதிகளில் நடத்துவதற்கான தடைகள் நீங்கியதாகவும் எதிர்வரும் நாட்களில் மனுக்கள் மீளப்பெறப்படும் என்றும் தெரிவித்தார்.