வென்னப்புவ - பொரலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் 9 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், 9 மாத கைக்குழந்தை சம்பவத்தில் உயிரிழந்துள்ளது . 

இதேவேளை குறித்த தாய் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சடலம்  சிலாபம் வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் வைக்கப்பட்டுள்ளது .