சீரற்ற காலநிலை : நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பு - இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ: 

Published By: Robert

30 Nov, 2017 | 11:01 AM
image

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுவரை கிடைத்த விபரங்கள் இதோ: 

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக இதுவரை 04 பேர் பலி, 17 பேர் காயம், 5 பேர் மாயமாகியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 07 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம்,  ஊவா மாகாணம்,  ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று (30) திட்டமிடப்பட்டிருந்த இறுதித் தவணை பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரேலியா, பதுளை, மொனராகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக கொழும்பு - பதுளை வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளை - பேரகலை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தால் குறித்த வீதியில் போக்கு வரத்து தடையேற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி வந்த இரண்டு விமானங்கள் காலநிலை சீரின்மையால் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை பண்டாரவளை பகுதியில் மண்மெடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தெற்கு, சபரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சுமார் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10