மண்சரிவு காரணமாக கொழும்பு - பதுளை வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியில் பெரும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹப்புத்தளை - பேரகலை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தால் குறித்த வீதியில் போக்கு வரத்து தடையேற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.