(க.கிஷாந்தன்)

 

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல் வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மேல் ஏறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

'நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர். 

நல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றது . 

தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

 

காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னர் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.

 

ஆட்சிமாற்றத்தின் பின்னர் நல்லிணக்கத்துக்கு சிறந்ததொரு சமிக்ஞையை விடுக்கும் வகையில் தமிழ் மொழியில் தேசியகீதம் இம்முறை தமிழ் மொழியில் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.