நடப்பு ஆண்டுக்கான தேர்தல் இடாப்பில் தமது பெயர்கள் இடம்பெறாதவர்கள் அது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கும்படி தேர்தல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களது பெயர்கள் அடங்கிய இடாப்புக்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.

திருத்தம் செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல்களே இடாப்பில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதில் தமது பெயர்கள் விடுபட்டிருப்பின் அது குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.