தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங்யின் அழைப்பை ஏற்று தென்கொரியாவிற்கான 3 நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல்  சியோல் நகரில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த தென் கொரிய இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவுத் தூபியானது சியோல் நகரின் தேசிய மயான பூமியில் அமைந்துள்ளது. 

நினைவுத் தூபி அமைந்துள்ள வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் நிர்வாகி An Suhyun உள்ளிட்ட குழுவினரால் மிக சிறப்பாக வரவேற்கப்பட்டார். 

இராணு அணிவகுப்பு மரியாதையுடன் இராணுவ நினைவுத்தூபி அருகே மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஜனாதிபதி, இராணுவ நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். 

அதன் பின்னர் விசேட விருந்தினர்களின் நினைவுக் குறிப்பேட்டிலும் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.