தாம் ஏவிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது முழு அமெரிக்க கண்டத்தையும் அழிக்கக்கூடியதென வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையானது இன்று புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ள நிலையில், ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் சென்றுள்ளதாகவும் 4,475 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.