பிரத்தியேக வகுப்பிற்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றம் நிரூபனம்

Published By: Sindu

29 Nov, 2017 | 08:37 AM
image

வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்  குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து இறுதி தீர்ப்பை அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து  " இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு இலவசமாக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு எதிராக தன்னை அவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும்" என்று நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் 10ஆம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவரை 34 வயது நிரம்பிய, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணிதபாட ஆசிரியர்  தனது வீட்டிற்குப்பக்கத்தில் தனியார் வகுப்பு ஒன்றினை நடாத்தி வந்திருந்ததுடன் மாணவர்களை பரீட்சைக்கு பிரத்தியேகமாக தயார்ப்படுத்துகின்ற சேவையையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிரத்தியேக வகுப்பிற்கு வந்து இரவில் அவரது வீட்டில் தங்கி நின்று படித்த 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து குறித்த வழக்கின்  இறுதி தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32