கழுதைகளைச் சிறைவைத்த பொலிஸ் அதிகாரி! விடுதலை செய்ய வந்த அரசியல்வாதி!

Published By: Devika

28 Nov, 2017 | 06:40 PM
image

சிறையை விட்டு கைதிகள் விடுதலையாவதை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ஜாலோன் மாவட்டத்தின் சிறையில் இருந்து எட்டுக் கழுதைகள் ‘விடுதலை’யாகியுள்ளன.

இதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்தக் கழுதைகளை விடுவிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியொருவர் நேரடியாக சிறைக்கு வந்தது!

நடந்தது இதுதான்!

சிறைச்சாலைக்குள் விலையுயர்ந்த பூச்செடிகள் மற்றும் தாவர இனங்களை நட வேண்டும் என்பது சிறைச்சாலை உயரதிகாரியின் நெடுநாள் ஆசை! இதற்காக, சிறைச்சாலை வெளிப்புறத்தில் உயர் ரக தாவரங்கள் சிலவற்றை வைத்திருந்தார்.

 அப்போது, ஊரைச் சுற்றிய எட்டுக் கழுதைகள், சிறை வளாகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இந்தத் தாவரங்களைத் தின்றும் அழித்தும் தீர்த்துவிட்டன.

இதனால் கடுங்கோபமடைந்த அந்த உயரதிகாரி, எட்டுக் கழுதைகளையும் சிறைக்குள் வைக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் வெளியே கசியவே, அப்பகுதி அரசியல்வாதியொருவர் தலையிட்டு கழுதைகளை விடுவிக்கக் கோரியுள்ளார்.

இதையடுத்து நான்கு நாட்களுக்குப் பின் எட்டுக் கழுதைகளும் விடுதலை செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right