சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை முன்னிட்டு சுவாமி ஐயப்பனின் தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக, அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் தரிசனம் இரவு பதினொரு மணி வரை இடம்பெறும். எனினும் இம்முறை வழக்கத்திலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருகை தந்தபடியிருப்பதால், சுவாமி ஐயப்பனின் தரிசன நேரம் அதிகாலை மூன்று மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததற்கும் அதிகமான பக்தர்கள் குவிவது ஒருபுறமிருக்க, விசேட தரிசன அந்தஸ்து இம்முறை இரத்துச் செய்யப்பட்டிருப்பதுவும் இந்தப் புதிய தரிசன நேர மாற்றத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, மேலதிகமாக ஆயிரத்து 500 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளுக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.