நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு

By Devika

28 Nov, 2017 | 05:17 PM
image

யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரும் கையளித்த பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மனுவை நிராகரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்ரி சைலவன், சந்தேக நபர்கள் மூவரின் விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதிவரை நீட்டித்து உத்தரவிட்டார்.

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை 22ஆம் திகதி காலை வேளையில் இடம்பெற்றது. இதில், நீதிபதியின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன், மற்றொரு உத்தியோகத்தார் காயமடைந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right