ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.