தர்மதுரை புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உற்சாகத்தில் திளைக்கிறார்.

காரணம் கேட்ட போது, ‘ நான் மதிக்கும் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் ஆகியோர்களின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறேன். இது போதாதா என்னுடைய உற்சாகத்திற்கு என கேட்கிறார்.

இவர் தற்போது முன்னணி இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் கதையின் நாயகி போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க ஒப்புக் கொள்கிறாராம். அத்துடன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியிலும் நடிக்க தயார் என்றும் சொல்கிறார்.

இவரது கையில் தற்போது வட சென்னை, துருவ நட்சத்திரம், மணிரத்னத்தின் பெயரிடப்படாத படம், லட்சுமி, இது வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவரது நடிப்பில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் கடைசியாக வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தகவல் : சென்னை அலுவலகம்