( ஆர். பிரபுராவ் )

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரைப் பகுதியில்  இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட தங்கத்தை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கையிலிருந்து  ரூ 2.3 கோடி ரூபா பெறுமதியான 8 கிலோ  தங்கத்தை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ள வருவாய் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.