கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை முதலிய இடங்ளைச் சூழவுள்ள பிரதேசங்களில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை விநியோகித்த சந்தேகத்தின்பேரில் நான்கு பேரை  கைதுசெய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை  பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி விசாரணைகளை மேற்கொண்ட கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் , குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 55, 25 மற்றும் 30 மூன்று  சந்தேக நபர்களை  கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும், கட்டுகஸ்தோட்டை பொலிஸார், கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடிவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.