இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் காச நோயா­ளர்களின் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக இரத்­தி­ன­புரி மாவட்ட காச நோய் கட்­டுப்பாட்டுப் பரிவு வைத்­தியர் எம்.பி.காமினி குண­வர்­தன தெரி­விதார்.

இந்நோய் தொடர்­பான  தெளி­வான விழிப்­பு­ணர்­வின்­மையும்  இவர்கள் முறை­யாக தொடர்ந்து சிகிச்சை பெறாமையும் இந் நோய் அதி­க­ரிப்­பிற்கு பிர­தான கார­ண­ங்களாக அமைந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 

ஒரு வரு­டத்தில் இலங்­கையில் 14 ஆயிரம் பேர் காச நோயினால் பீடிக்­கப்படுவதாகவும் இதில் 10 ஆயிரம் பேர் முறை­யாக சிகிச்சை பெற்றுக் கொள்­வ­தில்­லை­யெ­னவும் கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 600 பேர் காச நோயா­ளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.  2016 ஆம் ஆண்டு  579 காச நோயா­ளர்கள் கண்டுபிடிக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த காலங்­களில் 2பேர் சய­ரோக நோயினால் இறந்­துள்­ளனர். இவர்கள் இரு­வரும் தோட்­டப்­ப­கு­தியைச் சேர்ந்­த­வர்கள். 

காச நோயினால் பீடிக்­கப்­பட்ட ஒருவர் முறை­யாக சிகிச்சை பெற்­றுக்­கொள்­ளா­விட்டால் இந்நோய் 15 பேருக்கு தொற்­று­கின்றன. இந்­நோயை கட்­டுப்­ப­டுத்­த பிர­தே­ச­வா­ரி­யாக சிறு குழுக்கள் அமைக்­கப்­பட்டுள்ளதுடன் பாட­சாலை மாணவர்கள் மற்றும் பிரதேச சுகாதார காரியாலயங்கள் ஊடாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.