பதுளை பிரதேச செயலகங்களில் மூன்றில் ஒரு வீதமானோர் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருந்து வருகின்றனர். அத்துடன், பதுளை மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று செயலகப்பிரிவுகள் கஷ்டப் பிரதேச செயலக பிரிவுகளாகவே இருந்து வருகின்றன என்று மக்கள் விடுதலை முன்னணி இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்னாயக்க எம்.பி. தெரிவித்தார்.
பதுளை வை.எம்.ஏ.மண்டபத்தில் இல் நடைபெற்ற இளைஞர் அமைப்பின் பதுளை மாவட்ட மாநாட்டில் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்னாயக்க எம்.பி. கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்இ இலங்கையிலேயே ஆகக்குறைந்த க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேற்றினை பெற்றவர்களும் பதுளை மாவட்டத்தில் மீகாகியுல பிரதேச செயலகப் பிரிவிலேயே இருந்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் காலாகாலமாக அமைச்சர்களாக அரசியல் தலைவர்களாக இருந்துவரும் நிமல் சிறிபால டி சில்வாஇ டிலான் பெரேராஇ சமரவீர குடும்பத்தினர் ஆகியோர் பதுளை மாவட்டத்தில் மேற்கொண்டு வந்த சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் பயன்தான் இவைகள்.
பதுளை மாவட்டத்தின் பின்னடைவுகள் குறித்து அவதானிப்போமேயானால் மேற்கண்ட தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது. எமது நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியைக்கொண்ட நாடு கியூபாவாகும். ஐம்பது வருடகாலமாக எமது நாடு ஒலிம்பிக் பதக்கம் இரண்டை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், கியூபா 384 ஒலிம்பிக் பதக்கங்களை சுவீகரித்திருக்கின்றது.
எமது நாட்டின் ஐம்பது குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வகையில் போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனையாளராக இருந்து வருகின்ற நிலையினைக் காண்கின்றோம். ஆனால்இ கியூபாவில் 112 குடும்பங்களுக்கு ஒருவர் விஞ்ஞானியாக இருந்து வருகின்றார். எமது நாட்டில் தினமொன்றிற்கு 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் ஐந்துபேர் இருபது வயதிற்கு குறைந்தவர்களாவர். ஆனால் கியூபாவில் தற்கொலை செய்பவர்கள் கிடையாது. கியூபாவில் 120 பேருக்கு ஒருவர் டாக்டராக இருந்துவருவதும் விசேட அம்சமாகும். கல்விஇ விளையாட்டு ஆகிய எந்தவொரு விடயத்திலும் கியூபா மக்கள் முன்னணியிலேயே உள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பன்னிரண்டாயிரம் இளைஞர்இ யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இதற்கென நிரந்தர வேலைத்திட்டமொன்று இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்நாட்டில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூகத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டுவரவும் இந்நாட்டினது ஆட்சியாளர்களால் கடந்த 60 வருடங்களாகவே முடியவில்லையென்பது தௌிவாகியுள்ளது.
நாட்டில் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறந்த தலைவரொருவர் அவசியமாகும். அத்தகைய தலைவருக்கான வெற்றிடம் எமது நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனைப் பூர்த்தி செய்ய வேண்டியது இளைஞர்களது கடப்பாடாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM