ஆலய அன்னதானத்தை உட்கொண்ட 80 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Published By: Priyatharshan

27 Nov, 2017 | 02:34 PM
image

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் உள்ள கிரிஸ்தவ ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தை உட்கொண்ட 80 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்று ஞாயிற்றுகிழமை குறித்த தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயமொன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தை உட்கொண்ட குறித்த தோட்டத்தில் உள்ள 80 பேர் பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழங்கபட்ட அன்னதானத்திற்கு சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் அனுமதி பெறப்படவில்லையெனவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்

உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கபட்டவர்களுள் 15 பேர் பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவில் சிகிச்சை பெற்றுசென்றுள்ளதுடன் நான்கு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபெற்று வருவதாகவும் பொகவந்தலாவை தோட்டவைத்தியசாலையில் 10 பேர் சிகிச்சைபெற்றுள்ளதாகவும் மேலும் 20 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்டவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆலயநிர்வாகத்தின் மீது 08.12.2017 அன்று அட்டன் நீதிவான் நீதிமன்றில் வழங்கு தொடரவுள்ளதாகவும் பொகவந்தலாவை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19