சுதந்­திர தினத்தைக் கொண்­டாடும் நாம் எல்­லோ­ருக்கும் உண்­மை­யான ஒழுக்­கப்­பண்­பாடும் அறி­வு­பூர்­வ­மா­னதும் சமத்­து­வ­மா­ன­து­மான சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்­ப­ணிப்போம். நாம் பெற்றுக்கொண்­டுள்ள சமா­தா­னத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் பேணிப் பாது­காத்து நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் சிறந்­த தோர் எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­கொள்வோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

இன்று கொண்­டா­டப்­படும் தேசிய சுதந்­திர தினத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இன்­றைய தினம் எமது 68ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடும் நாம் தேசத்தின் சுதந்­திரம் இறைமை மற்றும் ஆள்­புல எல்­லையைப் பாது­காப்­ப­திலும் தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் எமது மக்­களின் பொரு­ளா­தார அர­சியல் உரி­மை­களைப் பலப்­ப­டுத்­து­வதில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­க­ளை­யிட்டு பெரு­மைப்­ப­டு­கின்றோம்.

ஒரு வரு­டத்­திற்கு முன்னர் மக்கள் வழங்­கிய ஆணைக்கு ஏற்ப ஒரு நிலை­யான நல்­லாட்சிக் கட்­ட­மைப்பை ஸ்தாபிப்­ப­தற்­காக ஜன­நா­யகம் நல்­லாட்சி சட்ட ஆட்சி மற்றும் ஒரு அர்த்­த­மிக்க பாரா­ளு­மன்ற முறை­யினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லையில் இந்த சுதந்­திர தினத்தைக் கொண்­டா­டு­கின்றோம். அந்த வகையில் இந்­நி­கழ்வு விசேட முக்­கி­யத்­து­வத்தைப் பெறு­கின்­றது. எமது அனைத்து மக்­களும் பாது­காப்­பாக வாழ்­வ­தற்­கான ஒரு சமூக அர­சியல் சூழலை உரு­வாக்கும் இப்­பா­தையில் தொடர்ந்தும் பய­ணிக்க நாம் உறு­தி­யோடு உள்ளோம்.

இந்த அடை­வு­களைத் தொடர்ந்து நாம் புதிய அபி­வி­ருத்திப் பணி­களை ஆரம்­பித்­துள்ளோம். கடந்த காலத்தின் பல­மான சமூக கலா­சார மர­பு­ரி­மை­களை ஆர்­வத்­துடன் பாது­காத்து எதிர்­கால வெற்­றி­களை நோக்கி முன்­னேறும் அதே­நேரம் சுதேச அறி­வையும் திறன்­க­ளையும் அபி­வி­ருத்தி செய்­வ­தி­லேயே எமது சுதந்­தி­ரத்தின் பலம் பெரிதும் தங்­கி­யுள்­ளது என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.

இன்­றைய தினம் சுதந்­தி­ரத்தின் அடை­வு­களைக் கொண்­டாடும் நாம் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போரில் எமது இறை­மை­யையும் ஆள்­புல எல்­லை­யையும் பாது­காப்­ப­தற்­காக மிகப்­பெரும் தியா­கங்­களைச் செய்த எமது பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு கௌர­வத்­தையும் மரி­யா­தை­யையும் செலுத்­து­வது எமது கடப்­பா­டாகும்.

நீதி மற்றும் மானி­டத்­திற்­கான அர்ப்­ப­ணத்­துடன் எமது நடு­நிலை வெளி­நாட்டுக் கொள்கை சர்­வ­தேச சமூ­கத்தில் எமக்கு பல நண்­பர்­களைப் பெற்­றுத்­தந்­துள்­ளது. சுபீட்­சத்தை நோக்­கிய எமது பய­ணத்தில் எமக்கு உதவ அவர்கள் தயா­ரா­க­வுள்­ளனர்.

சுதந்­திர தினத்தைக் கொண்­டாடும் நாம் எல்லோருக்கும் உண்மையான ஒழுக்கப்பண்பாடும் அறிவுபூர்வமானதும் சமத்துவமானதுமான சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்பணிப்போம். நாம் பெற்றுக் கொண்டுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உறுதிகொள்வோம்.