திருமணமான பெண் ஒருவர் வேறு இரு ஆடவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தகாத உறவினால் இரண்டு உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளதோடு இரு சிறுமிகள் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

தெரணியகல ரன்வல, மாலிபொட பகுதியில் கடந்த 25ஆம் திகதி நபர் ஒருவரால் திருமணமான பெண் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் .

கொலை செய்யப்பட்ட பெண் மாலிபொட பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதுடைய காந்தி ஹேமலதா என்ற திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வேறு ஒரு பிரதேசத்தில் தொழில் புரிந்து வருவதால்  வார இறுதி நாட்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

குறித்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் தனித்து இருந்த போது அவரின் கள்ளக் காதலன் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மற்றுமொரு கள்ளக் காதலனும் வீட்டிற்கு வர வாக்கு வாதம் கைக் கலப்பாக உருவெடுத்துள்ளது.

குறித்த கைக்கலப்பில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதோடு பெண்ணின் இரு சிறு பிள்ளைகளும் சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் சிறுமிகள் இருவரும் இது வரையில் அவிஸ்ஸாவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு 60 மீட்டர் தொலைவில் குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஹிங்குரல பிரதேசத்தில் வசித்து வரும் 50 வயதுடைய தேவ் பஹல தரயலாகே ரூபசிங்க ஆவார்.

கொலை செய்யப்பட்ட இருவரினதும் சடலங்களை பொலிஸார் மீட்டதுடன் இரட்டைக் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை தீவிரமாக நடாத்தி வருகின்றனர்.