மாத்தளை இந்து மாணவர்கள் தாய்வான் பயணம்

Published By: Robert

27 Nov, 2017 | 10:02 AM
image

இலங்கை புத்­தாக்­குநர் ஆணைக்­கு­ழுவின் சஹ­சக 2017 இல் நடை­பெற்ற தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் பாட­சாலை மட்­டத்­திற்­கான போட்­டியில் விவ­சாயத் துறையில் அகில இலங்கை ரீதி­யாக முதலாம் இடத்தைப் பெற்­றுக் ­கொண்­ட­தற்­கி­ணங்க சர்­வ­தேச ரீதி­யான போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­காக மாத்­தளை  இந்து தேசியக் கல்­லூரி  மாண­வர்­க­ளான வி.கேஷான் குமார், வி.விஜித்­குமார் சகோ­த­ரர்கள் எதிர்­வரும் டிசம்பர் 5 ஆம் திகதி தாய்வான் பய­ண­மா­கின்­றனர். 

கேஷான் குமார் 2016 ஆம் ஆண்டு புத்­தாக்­குநர் வேலைத்­திட்­டத்தின் கீழ் நடந்த  போட்­டியில் தூசு அகற்றும் ரொபோ கருவி ஒன்றை செய்து தேசிய மட்­டம்­ வரை பங்­கு­பற்­றினார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வி.கேஷான் குமார், வி.விஜித்­குமார் சகோ­த­ரர்கள் இலத்­தி­ர­னியல் பழம் பறிக்கும்  கருவி ஒன்றை செய்து பாட­சாலை மட்­டத்­திலும்,  வலய மட்­டத்­திலும், மாகாண மட்­டத்­திலும் தெரிவு செய்­யப்­பட்டு தேசிய மட்­டத்தில் அகில இலங்கை ரீதி­யாக விவ­சாயத் துறைக்­கான புத்­தாக்­குநர் போட்­டியில் முதலாம் இடத்­தைப்­ பெற்று தாய்­வானில் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை  நடை­பெ­ற­வுள்ள  சர்­வ­தேசப் போட்­டியில் பங்­கு­பற்ற உள்­ளனர். 

சர்­வ­தேச ரீதி­யாக இம்­ மா­ண­வர்­களை பங்­கு­பற்ற  செய்யும் முயற்­சியில் மாண­வர்­களின் பெற்­றோ­ரின்  பங்­க­ளிப்பு பாராட்­டத்­தக்­கது. மேலும் இவர்­களின் புத்­தாக்க செயற்­பாட்டு கரு­வியை மெரு­கூட்டி தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கி ஊக்­கு­வித்­த­வர்கள் கல்­லூ­ரியின் அதிபர், பிரதி அதிபர், விஞ்­ஞான பாட ஆசி­ரி­யர்கள் ஆகியோர் ஆவர். 

இம்­மா­ண­வர்கள் தமது பெற்­றோ­ருக்கும், பாட­சா­லைக்கும் மற்றும் எமது நாட்­டிற்கும் பெருமை  சேர்த்­துள்­ளனர். சர்­வ­தேச ரீதி­யிலும் இப்­போட்­டியில் வெற்றி வாகை­சூட கல்­லூ­ரியின் சார்­பாக அதிபர்,  ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45