தலைமன்னார் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 'ஹசீஸ் 'என அழைக்கப்படும் ஒரு தொகுதி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு 33 கிலோ 935 கிராம் எடை கொண்ட ஹசீஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலை மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.