மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற திருமண விழாவொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 50 பேர் சுகவீனமடைந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற குறித்த திருமண விழாவில் கலந்துகொண்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி, தலைவலி, வயிற்றோட்டம், உடல்வலி போன்ற குணங்குறிகளுடன் நோயாளர்கள் வருகை தந்துள்ளதாக ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம் பலீல் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 20 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் 30 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.