“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”

Published By: Robert

26 Nov, 2017 | 10:06 AM
image

முன்னைய காலங்களில் குழந்தையின்மைக்குப் பெரிதும் பெண்களே காரணம் என்ற கருத்து இருந்துவந்தது. சில சமயங்களில் அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இன்று இந்த நிலை மாறிவிட்டது. குழந்தையின்மைக்கு அறுபது சதவீதம் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகளே காரணமாக இருக்கின்றன. இதை ஆண்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் இதுவே நடைமுறை யதார்த்தம்.

காரணம் வெளிப்படையானதுதான். அதாவது, இன்றைய வாழ்க்கை முறை. இதுவே ஆண்கள் பெரிதும் குறைபாடு உடையவர்களாவதற்குக் காரணம். உணவுப் பழக்கம், உடை கலாசாரம், புகைத்தல், மரு அருந்துதல், இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், ஏகப்பட்ட மன அழுத்தம், மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவது என்று ஒட்டு மொத்த வாழ்க்கையுமே ஆண்கள் தந்தையாவதற்கான வாய்ப்புகளைப் பறித்து விடுகின்றன.

நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை; அப்படியே சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவாக அது அமைவதில்லை. இதனால் உயிரணு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. புகைத்தலும் மதுப் பழக்கமும் மேலும் மேலும் உயிரணு உற்பத்தியில் பெருந்தடைகளை ஏற்படுத்துகின்றன.

இன்றைய போட்டி நிறைந்த பணிச் சுமையினால் இரவிலும் நீண்ட நேரம் பணி செய்ய வேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. இதன் பக்கவிளைவாக கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இவை, உயிரணு உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகளாகும்.

ஆண்களின் விந்துப் பையில் உயிரணுக்கள் உத்வேகத்துடனும் உயிர்ப்புடனும் இருக்க வேண்டும். அதற்கு, போதியளவு குளிர்ச்சி அங்கு இருக்கவேண்டும். ஆனால், அதிகாலையில் உள்ளாடைகளை அதுவும் இறுக்கமாக அணிந்துகொள்ளும் இன்றைய இளம் கணவர்கள், இரவு வரை அதை அகற்றுவதில்லை. இதனால் விரைப்பை வெப்பமாகி உயிரணுக்கள் தம் பலத்தை இழக்கின்றன.

மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவது அடுத்த பெரும் பிரச்சினை. கண்ணுக்குத் தெரியாத கதிர் அலைகள் அவர்களின் உடலையும் பாதிக்கின்றன. இதன்போது பெரிதும் சிக்கிக்கொள்வது உயிரணுக்களே! அலைபேசிகளை காற்சட்டைப் பையில் வைத்திருப்பதும் கூட ஆண் மலட்டுத் தன்மைக்கு எள்ளளவேனும் பங்களிக்கிறது. இவ்வாறான பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களுக்கே செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை அவசியமாகிறது.

இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். குழந்தை இல்லாத அனைத்துத் தம்பதியரும் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை செய்துகொள்ளவேண்டுமோ என்று தயங்குகிறார்கள். நிச்சயமாக இல்லை!

 கருத்தரிப்புக்கு உகந்த பருவத்தை அறிந்துகொள்வது முதல், தம்மிடம் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளை - உதாரணமாக, தைரொய்ட் போன்ற பிரச்சினைகளை - அடையாளம் கண்டுகொண்டுவிட்டால், மருந்து மாத்திரைகள் மூலமே மகப்பேற்றுத் தடைகளை விலக்கிக்கொள்ள முடியும்.

சில மாதங்களுக்கு முன் கொழும்பில், இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் ஒரு மருத்துவ முகாமில் கலந்துகொண்டேன். அங்கு இரண்டு தம்பதியர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு 22 வயது. மற்ற பெண்ணுக்கு 26 வயது. இருவரும் திருமணம் முடித்து ஆறு மற்றும் ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. இந்த நிலையில், குழந்தையின்மை பற்றி அறிந்துகொள்ள என்னிடம் வந்திருந்தனர்.

ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளையும் செய்திருந்தார்கள். அவற்றில் எந்தவிதக் குறைபாடும் இருக்கவில்லை. எனவே, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி, இன்னும் சுமார் இரண்டு வருடங்களுக்குள் தாய்மைக்கான அறிகுறிகள் இல்லாவிடத்து என்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

தகுந்த வயதில் வருபவர்களை முதலில் முழுமையாகப் பரிசோதனை செய்வோம். பெண்களைப் பொறுத்தவரையில் இரத்தப் பரிசோதனை மூலம் அவர்களது ஹோர்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்போம். அடுத்து, கர்ப்பப்பையின் அமைப்பு சரியாக இருக்கிறதா, முட்டைப்பையின் இயக்கம் சரியாக இருக்கிறதா, கட்டிகள், இரத்தக் கட்டிகள் என்று ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்று துல்லியமாகப் பரிசோதிப்போம். 

மேலும், ‘ஹிஸ்டோசல்பிங்கோ கிராம்’ எனப்படும் பரிசோதனை மூலம் கருக்குழாயை முழுமையாகப் பரிசோதிப்போம். சுமார் மூன்று நாட்களில் இந்தப் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துவிடும். 

ஒருவேளை கட்டி அல்லது கர்ப்பப்பையின் அமைப்பில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை இரண்டே நாட்களில் சரிசெய்துவிடுவோம். அவை மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கு மருந்துகளும் கொடுத்துவிடுவோம்.

ஆண்களிடம் உயிரணுக் குறைபாடுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை அதிநவீன தொழில்நுட்ப முறை மூலம் ஏழாயிரம் மடங்கு பெரிதாக்கிப் பார்த்துக் கண்டுபிடிப்போம். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், மருந்துகள் மூலம் குணப்படுத்த வாய்ப்பிருந்தால் மருந்துகளை சிபாரிசு செய்வோம்.

இப்படியாக மொத்தம் ஐந்து நாட்களில், தம்பதியரின் கருத்தரிப்புக்கான தடைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வையும் வழங்கி விடுவோம். ஒவ்வொருவரது பிரச்சி னைக்கும் ஏற்ற வகையில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொண்ட பின், அவசியப் படுபவர்களுக்கு மட்டும் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சைகளை ஆரம்பிப்போம். இதுவே செயன்முறைச் கருத்தரிப்பு சிகிச்சையின் பொதுவான விதிமுறை.

முதற்கட்ட பரிசோதனைகளுக்காக இந்தியா வரும் தம்பதியருக்கு, பரிசோதனைக் காலமான ஐந்து நாட்களும் இலவச தங்குமிட வசதிகளை நாமே ஏற்படுத்திக்கொடுத்துவிடுவோம். எனவே, தெரியாத ஊர் என்ற பயம் தேவையில்லை.

தற்போது ஹை-டெக் ஐ.வி.எப். என்ற மிக மிகப் புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துகிறோம். இதன்மூலம், கருச்சினைகளை தொடர்ச்சியாகவும் நுணுக்கமாகவும் அணுக்கமாகவும் ஆராய முடிகிறது. இதன்மூலம் குழந்தையற்றவர்களுக்கு மகப்பேறும், தொடர் கருச்சிதைவுகளுக்கு உள்ளாகும் தம்பதியருக்கும் நிறைந்த பலனும் கிடைக்கிறது.

எதிர்வரும் 2ஆம், 3ஆம் திகதிகளில் கண்டியில் உள்ள ‘ரோயல் கண்டியன்’ என்ற ஹோட்டலில் நடைபெறும் கண்காட்சியொன்றில் நான் நேரடியாகக் கலந்துகொள்கிறேன். உங்களுக்கு செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை தேவைப்படுமா? மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியுமா? என்ன விதமான சிகிச்சைகள் தேவைப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து சந்தேகங் களையும் என்னிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 075 4000012 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முன் பதிவு செய்துகொள்ள வேண்டியது மட்டுமே! மேலும் விபரங்களுக்கு: haripriyageetha@gmail.com

“மறந்துவிடாதீர்கள்... முயற்சித்தால் உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”

சந்திப்பு: தேவராஜன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29