(க.கமலநாதன்)

சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதராவாளர்களாக உள்ளனர். அதனால் அவர்களின் ஒத்துழைப்பை அவர் பெற்றுத்தந்து கட்சியை வழி நடத்த வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா  தெரிவித்தார். 

சுதந்திர கட்சி பிளவு படுவதை தடுப்பதற்கும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி சபைகளில் தம்மை வலுப்படுத்திக்கொள்வதை தடுத்து சு.க.வின் இருப்பை தொடர்ந்தும் உள்ளூராட்சி மன்றங்களில் பாதுகாப்பதற்கும் மஹிந்த, சந்திரிகாவின் முழுமையான பங்களிப்பு கட்சிக்கு அவசியம்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.