உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஜே.வி.பி நாடு முழு­வதும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அதன் செய­லாளர் டில்வின் சில்வா தெரி­வித்தார். 

முத­லா­வது ஆர்ப்­பாட்டம் 30ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடை­பெ­று­மெ­னவும் அவர் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியில் அங்­கம்­வ­கிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணையும் வரை உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்கு மைத்­திரி தரப்பு ஸ்ரீல.சு.கட்சி சூழ்ச்சி செய்வதாகவும் டில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.