மட்டக்களப்பில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால், கடந்த 24  மணித்தியாலத்தில் 75.1 மில்லி மீற்றர் கன மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு கடற்பகுதியில் குழப்பமான வானிலை நிலவுவதனால் இன்றும் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காராணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேசவாசிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்தக் காலநிலை அடுத்த நான்கு நாட்களுக்கும் நீடிக்கும் என்பதால், 30 திகதி வரை மட்டக்களப்பு, திருகோணாமலை, காங்கேசன்துறை, கொழும்பு மற்றும் காலி வரையான பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.