பணபலம், ஆள்பலம் இருந்தும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் தலைமறைவாக உள்ள பிரபல ‘தாதா’ தாவுத் இப்ராஹிம்! காரணம், அவரது ஒரே மகன் மொயின் நவாஸ்!
நிழல் உலகப் புள்ளியாக ஆரம்பித்து, இன்று தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் தாவுத்தின் மூன்று பிள்ளைகளில் ஒரே மகனான நவாஸ், முஸ்லிம் சமய போதகராக மாறியிருப்பதே தாவுத்தின் மன உளைச்சலுக்குக் காரணம்!
தாவுத்தின் சகோதரர் இக்பால் இப்ராஹிம் கடந்த செப்டம்பர் மாதம் தானேயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பம் முதலே தமது குடும்பத்தின் மேல் விழுந்திருக்கும் அவப்பெயரைக் கண்டு மொயின் நவாஸ் அதிருப்தி அடைந்திருந்ததாகவும் தனது தந்தையின் நடவடிக்கைகளால் குடும்ப உறுப்பினர்கள் பலரது பெயர்களும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றதை நவாஸ் அடியோடு வெறுத்ததாகவும் இக்பால் தெரிவித்துள்ளார்.
தந்தையின் செயற்பாடுகள் பிடிக்காததால் நவாஸ் குடும்பத்தில் இருந்து விலகியவராகவே காணப்பட்டார் என்றும் தாவுத்துடன் அவர் பேசிக்கொள்வதும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே மொயினை குர்-ஆன் ஈர்த்திருந்ததாகவும் அதன் ஆறாயிரத்து 236 வசனங்களும் மொயினுக்கு மனப்பாடம் என்றும் இக்பால் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் ஆடம்பரமான வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு, ஒரு பள்ளிவாசலுக்குச் சொந்தமான சிறிய வீடு ஒன்றில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் மிக எளிமையாக மொயின் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்பாலைத் தவிர, தனது சகோதரர்களில் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலும் ஏனைய சகோதரர்கள் உயிருடன் இல்லாததாலும் தனது சட்டவிரோத சாம்ராஜ்ஜியத்தை தனக்குப் பின் யாரிடம் ஒப்படைப்பது என்ற மன உளைச்சலுக்கு தாவுத் இப்ராஹிம் ஆளாகியிருப்பதாகவும் இக்பால் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM