பெண்களுக்கு குவைட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் ஒருவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் மாளிகாவத்தையைச் சேர்ந்தவர். நாட்டின் பல பகுதிகளையும் - குறிப்பாக, அம்பாந்தோட்டை பகுதியை - சேர்ந்த பெண்களிடம் முகவராகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், அவர்களை வேலைவாய்ப்புக்காக குவைட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பி அவர் கேட்ட தொகையை பல பெண்கள் அளித்துள்ளனர். எனினும் பணத்தைப் பெற்றுக்கொண்டபின் அவர் போக்குக் காட்டி வந்துள்ளார்.

இதையடுத்து செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.