பாகிஸ்தானின் குவெட்டா மாகாணத்தில் சற்று முன் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் காயமடைந்தனர். எனினும் இதுவரை பத்தொன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குவெட்டாவின் சரியாப் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் இது தற்கொலைத் தாக்குதலா, வெடிகுண்டு வீசப்பட்டதா என்பது குறித்து உடனடியாக அறியத்தரப்படவில்லை. எனினும், வாகனம் ஒன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றன.

மேலும் எந்தவொரு இயக்கமும் இதற்கு உரிமை கோரவும் இல்லை.