பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விடுமுறை மறுக்கப்பட்டதையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

லலிதா சால்வீ (28) என்ற இந்தப் பெண்ணுக்கு 28 வயதாகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து தமது உடலில் ஏராளமான மாற்றங்களை லலிதா உணர்ந்தார். பெண்ணாக இருப்பது ஒரு எரிச்சலான விடயமாகவே மாறிவிட்டது லலிதாவுக்கு!

மருத்துவ ஆலோசனையின்போது, அவருக்கு ஆண் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ‘வை’ குரோமோசோம்கள் அதிகளவில் இருப்பதைக் கண்டறிந்தனர். 

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தார். எனினும், அதற்குத் தேவையாக இருந்த ஒரு மாத கால விடுமுறை அவருக்குக் கிடைக்கவில்லை. இதையெதிர்த்தே அவர் மும்பை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், இந்த வழக்கில் லலிதாவுக்குத் தேவையான உதவிகளைத் தாம் தயாராக இருப்பதாக மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.